Thursday, 10 September 2020

நான் அவுங்களை காதலிக்கலையே?

 நிருபர் :

உங்களோடவருங்கால கணவர் எப்படிஇருக்கணும்?

நடிகை :
கடந்த காலத்தைப் பற்றி பேசி, நிகழ்காலத்தை
நாசமாக்காமல், எதிர்காலத்தைப் பற்றி
யோசிக்கிறவரா இருக்கணும்.

—————————————

நிருபர் :
உங்களோடகாதலுக்கு நடிகையோடஅம்மா
ஒத்துக்கலையாமே?

நடிகர்:
அவுங்க எதுக்கு ஒத்துக்கணும்? நான் அவுங்களை
காதலிக்கலையே?

———————————————–

“”எங்க வீட்டுலதிருடிக்கிட்டுப்போனவன் பஞ்சத்துல
அடிபட்டவனா இருப்பான்னு தோணுது சார் !”

“”எப்படிச் சொல்றீங்க?”

“” ஒரு வாரம், பத்து நாளைக்கு முந்தி என் மனைவி
செய்து பிரிஜ்ல வச்சிருந்த சாம்பார், ரசம்,
பொரியல்ன்னுஎல்லாத்தையும் காலி பண்ணிட்டு
போயிருக்கான் சார்?”


———————————————

பேஷண்ட் :
போன தடவை கொடுத்த மருந்து சீட்டைக் காட்டினா,
டாக்டர் ஏன் பார்க்கவே இல்ல சிஸ்டர் ?

நர்ஸ்:
எழுத்து புரியாததைப் பார்த்து எதுக்கு நேரத்தை
வீணாக்கணும்னுவிட்டிருப்பாரு சார்!

———————————————-

“”கால்வாய் -வாய்க்கால்… என்ன வித்தியாசம் ?”

“”ஆக்கிரமிப்புக்கு முந்தி கால்வாய் ;
ஆக்கிரமிப்புக்குப் பிறகு வாய்க்கால்”

– வி. ரேவதி, தஞ்சை.
————————————————–

ஹீரோ : என்னது… நம்ம படத்தை தியேட்டர்ல
ரிலீஸ் பண்ணிக்க அனுமதி கொடுத்துட்டாங்களா?

டைரக்டர் :
உங்க படத்துக்கு ஷோவுக்கு பத்து பேர் வருவதே
கஷ்டம்னு தெரிஞ்சு, சமூக இடைவெளி பிரச்னை
வராதுன்னு முடிவு பண்ணிட்டாங்களாம்!

– கே.எம். ஃபாரூக்,

தைரியமா, சூடான கேள்வி கேட்டுட்டாரு..!

 தலைவரே, உங்களை சந்திக்க தொகுதி மக்கள் வந்திருக்காங்க,

எப்ப சந்திக்கிறீங்க..?

வெயில்ல வீணா அலைய வேண்டாம்…
அடுத்த எலக்ஷன் அப்ப, நானே நேரில் சந்திக்கிறேன்னு
சொல்லி அனுப்பு…!


>எஸ்.சடையப்பன்

——————————————

கமலா, உன் பிறந்த நாளுக்கு செயின் வாங்கித் தரேன்..!

செயின் வேணாங்க…கார் வாங்கிக் கொடுங்க..!

கவரிங்ல கார் கிடைக்காதே, கமலா…!

>பி.பாலாஜி கணேஷ்

நேத்து பைக்ல வந்து செயினை பறிச்சுட்டுப் போனவன்,
இன்னைக்கு திரும்ப கொண்டு வந்து கொடுத்துப்
போறான்…!


ஏன்?

ஓல்டு மாடல்னு அவனோட மனைவி வேணாம்னு,
சொல்றாங்களாம்..!


>என்.பர்வதவர்த்தினி

—————————————

என்னடா, சட்டை போடாம வாக்கிங் போறே?

டாக்டர்தான் வெறும் வயித்தோட நடக்கணும்னு
சொன்னார்..!


>எச்.ஷாகூல் ஹமீது

—————————————

நீ குளிக்காம இருக்கறதுக்கு உங்க அப்பாதான் காரணமா?

எங்க அப்பாதான் உன்னை பார்க்கறவங்க மூக்கு மேல
விரல் வைக்கணும்னு சொன்னார்…!

>சீ.இருளப்பசாமி

தலைவரோட தொப்பைக்கு எதிர்க்கட்சிதான்
காரணமாமே..!


ஆமா…எதிர்க்கட்சி மிரட்டலுக்குப் பயந்துதானே
தலைவர், ‘வாக்கிங்’ போறதை அடியோடு நிறுத்திட்டார்..!

>வைஷ்ணவி

——————————————–

கூட்டணி பற்றி பேச வரும்போது தலைவர் குடிச்சு
இருப்பார்னு எப்படி சொல்றே?


பின்ன.ஜெயிச்சா நான்தான் கவர்னர்ன்னு சொல்றாரே…!

>வி.பார்த்தசாரதி

—————————————

நம்ம மன்னருக்கு பேரீச்சம்பழம்னா சுத்தமா பிடிக்காது..!

அதுக்காக பழைய இரும்பு வியாபாரியிடம், வாளை
கொடுத்துவிட்டு, மாம்பழம்’ குடுன்னு சண்டை போடறது
நல்லாவா இருக்கு…!


>வி.பார்த்தசாரதி


தலைவருக்கு கபாலி மாமூல் தர்றானே?

அது மாமூல் இல்லே…குரு தட்சணை..!


>லெ.நா.சிவகுமார்

——————————

எதுக்குங்க தலைவரே, ஒயின் ஷாப்ல போய் வெள்ளி
ஒரு கிலோ குடுங்கன்னு கேட்டீங்க…?


டி.வி.செய்தியில ‘பார்’ வெள்ளி ஒரு கிலோ ஆயிரம்
ரூபாய் குறைஞ்சிருக்குன்னு சொன்னாங்களே..!


>ராசி

——————————–

தலைவர் சரியான சந்தேகப்பேர்வழி..!

எப்படி சொல்றே?

எங்கே கள்ள நோட்டு இருக்குமோன்னு சந்தேகப்பட்டு,
பணமாலை சூட்ட வந்தவங்ககிட்டே ‘செக் மாலை’யா
போட்டுடுங்கன்னு சொன்னாரே…!


மண்டை ஒடைஞ்சு ரத்தம் வர்றதுக்கு தலைவர்
சொல்ற காரணம் நம்பும் படியா இல்லையே!


என்ன சொன்னார்?

வெயில் மண்டையை பிளந்துடுச்சுன்னு சொல்றார்!

சோலை சுகுணா.

————————————-

தலைவர் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாரே!

என்ன சொன்னார்?

நிழலுக்கு கூட புழல் பக்கம் ஒதுங்கியது இல்லைங்கிறாரே!

வீ.விஷ்ணுகுமார்.


தலைவர் சொன்ன பதிலை கேட்டு ஜட்ஜ் டென்ஷன்
ஆயிட்டாரா.. ஏன்?


ஆத்துல ஏன் மணல் அள்ளுனீங்கன்னு கேட்டா போலீஸ்
கண்ணுல தூவறதுக்குன்னு சொன்னாராம்!

பர்வீன் யூனுஸ்.

————————————————

முப்பது வருஷத்துக்கு எதிரிங்க தலைவர்கிட்ட நெருங்கவே

முடியாது!

அப்புறம்?

அப்புறம் விடுதலை ஆயிருவாரு!

கி. சாமிநாதன்.

Saturday, 17 November 2018

சிரி சிரி ....

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே
போனீங்களே.. என்ன ஆச்சு..?”
“டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு..!

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க..”
“சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?”


||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


“உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக்
கூடாதா?”
“அதனால உனக்கென்ன?”
“நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே”

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான
கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?”
“இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!”

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு 
சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?”
“என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் 
பயமா இருக்கு!”

—————————————-


“ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னைய மூணு பேர் 
சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க சார்…” 

“ரெண்டு நாளா கம்ப்ளெயிண்ட் பண்ணாம என்ன பண்ணினே?” 

“அவங்ககிட்ட பணம் கேட்டு அலைஞ்சிட்டிருந்தேன்…”


—————————————–
ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல…?”


“சார்… எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி 
போனா மரியாதையா இருக்காதுனு”

—————————————-“என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?” 

“அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா 
புரிஞ்சுக்கிட்டாரு..”


டாக்டர், எனக்குத் தொடர்ந்து தினசரி கனவு வருகிறது!

உங்களுக்கு வந்திருப்பது மெகா சீரியல் கனவு.
பயப்படாதீங்க 100 எபிசோடில் முடிந்துவிடும்!


———————————-

நேத்து என்னை மானேஜர் என்னைக்  கூப்பிட்டு இந்த
ஆபிஸ்ல சிரிச்ச முகமா இருக்கிற ஒரே ஆள்
நான்தானாம், பாராட்டினார்!


டே….உன்னை மறைமுகமா இளிச்ச வாயன்னு சொல்றார்!


——————————————-

ஓடுற பஸ்ல ஏறக்கூடாதுன்னு தெரியாதா உனக்கு?

ஓடாத பஸ்ஸில் ஏறினால் எந்தக் காலத்தில நான் ஊர்
போய்ச் சேர்றது…!—————————————

என் மனைவி கல்யாணமான புதுசில தேன்மாதிரி பேசுவா!

இப்ப?

தேனீ மாதிரி கொட்டுறா!


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

மாத்திரையெல்லாம் எழுதித் தந்துட்டேனே…
அப்புறம் என்ன?’’
‘‘நர்சுக்கு என்னென்ன பிடிக்கும்னு அப்படியே
எழுதிக் கொடுங்க டாக்டர்!’’


—————————–
‘அரெஸ்ட் ஆகி ஜெயில்ல இருக்கிற மாதிரி
கனவு வருது டாக்டர்…’’
‘‘இந்த மருந்தை சாப்பிடுங்க…
உடனே ஜாமீன் கிடைக்கிற மாதிரி கனவு வரும்!’’
– 

—————————————–
‘‘தலைவர் குஷியா இருக்காரே, என்ன விஷயம்?’’
‘‘இன்னைக்கு தொண்டர்கள் அவருக்குப் பிடிச்ச
செருப்பா வீசியிருக்காங்க!’’


————————————
‘‘அன்பார்ந்த பெரியோர்களே… தாய்மார்களே…’’
‘‘திரும்பி நின்னு பேசுங்க தலைவரே! நாங்க
எல்லாம் மேடைலதான் இருக்கோம்.’’

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

டார்லிங்… நம்ம காதலை ஏழு ஜென்மத்துக்கும்
மறக்க மாட்டேன் டியர். . .!
நீங்க இப்படி சொல்றீங்க,’’அந்த ராஸ்கல் என் கையில்
சிக்கிட்டான்னா, அடிக்கிற அடியை ஏழு ஜென்மத்துக்கும்
மறக்க மாட்டான்’’ னு என் டாடி சொல்றாரே!
-=====================================
தினமும் என் புருசனை அடிக்கிற மாதிரி கனவு
வருது டாக்டர்!
அதனால் என்ன?
விடிஞ்சு பார்த்தா பூரிக்கட்டை உடைந்து போயிருக்கு
டாக்டர்!
-=====================================
தலைவர் எதுக்கு பல குரலில் பேச ஆசைப்படறாரு?
ஒரே அபார்ட்மெண்ட்லே நிறைய சின்ன வீடுகளை
குடி வெச்சிருக்கிறாராம்!
-=========================================
அமைச்சரே, மன்னன் இன்று எனக்கு பொன் தருவானா?
புலவரே… பொத்திக்கிட்டு போய்விடுவது நலம். அரண்மனை
அண்டாவில் பூச ஈயம் வாங்கக் கூட காசில்லாத அளவுக்கு
கஜானாவை காலி செய்து வைத்திருக்கிறான் இந்த ஊதாரி
மன்னன்!
-======================================
ஆண்களை மதிக்கிற ஜவுளிக் கடை அது ஒன்னுதான்னு
எப்படி சொல்றே?
மனைவிகள் புடவைகள் எடுத்திக்கிட்டு வர்றவரைக்கும்
போரடிக்காம, கணவன்மார்கள் சினிமா பார்க்க ஜவுளிக்கடை
பக்கத்திலேயை ஹோம் தியேட்டர் கட்டி வச்சிருக்காங்களே!
-======================================


நீங்க அதிசயத் தலைவர் தலைவா…!

எப்படி சொல்றே?

உங்களுக்கு செலவு வைக்க கூடாதுன்னு நினைச்சு
நம்ம கட்சியில் யாருமே உள்ளாட்சித் தேர்தல்ல
நிக்கலே பாருங்க…!
————————————-

இடுப்பு வலிக்கு மருந்து கேட்டா வயித்து வலிக்கு
மருந்து கொடுத்திட்டீங்களே, டாக்டர்!


எப்படி கண்டுபிடிச்சே?

ஒரு வருஷமா தீராத வயித்து வலி தீர்ந்து
போச்சுங்களே..!-,
—————————————-

எனக்கு வாழ்த்த வயசில்லை அதனால் வணங்குகிறேன்!

தலைவரே, நீங்க வாழ்த்த வந்தது என்னோட
பேரக் குழந்தையா…!!——————————————-

சாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்டே?

ஏழு ஜென்மத்துக்கும் நான்தான் உங்க மனைவியா
இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்!, நீங்க என்ன
வேண்டிக்கிட்டீங்க?

இது ஏழாவது ஜென்ம்மா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்!!

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||


Sunday, 1 November 2015

கண்ணதாசனின் நகைச்சுவைகள்..[ஜோ...க்...ஸ்]

திரு.கண்ணதாசன்.. கவியரசர் மட்டுமல்ல நகைச்சுவை சக்கரவர்த்தியும் அவரே என்பதை  "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"  நமக்கு உணர்த்துகிறது இதிலிருந்து சில நகைச்சுவைகள்.  "வெள்ளைச்சாமி' அவர் உருவாக்கிய நகைச்சுவை கதாபாத்திரம்.


அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப் படுவதைக் கண்டான்.

எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை, பணத்தை மட்டுமே வசூலித்தான்.

ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றிற்று.

பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;

"ஐயா..இது யாருடைய பிணம் ?"

அவர்கள் சொன்னார்கள் :

"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்; வட்டிக்குப் பணம்
கொடுப்பதே..இவருடைய தொழில்.."

அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.

பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...

சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.

அரிச்சந்திரன் கத்தினான்  " ..வட்டி வசூலாகி விட்டது..."

பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.

*******************************************************************************

காலக் கோளாறு

கணவன் சாப்பிட உட்கார்ந்தான். மனைவி பரிமாறினாள்.

சீ! இது என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் சாப்பிட வேண்டும் !

கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்

சீ..! இது என்ன பழமா ? என் அம்மா கையால் பழங்களை வாங்கிச் சாப்பிடவேண்டும் !

மனைவி தன் மடியில் கணவனின் தலையை வைத்துத் தூங்க வைத்தாள்.

கணவன் : சீ ! நீ காட்டுவது பாசமா ?  பாசம் என்பதை என் அம்மாவிடம் தான் பார்க்க வேண்டும் !

மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக் கொண்டிருக்கலாமே !

கணவன் : என்ன செய்வது ? எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக்கொண்டு விட்டாரே !

********************************************************************
இல்லற இன்பம்

பாகவதர் : கல்யாணி ராகம் என்றாலே எனக்கு பிடிக்காது...

சிஷ்யன் : ஏன் ?

பாகவதர் : என் மனைவி பெயர் கல்யாணி...

*******************************************************************
பகுபதம் !

வெள்ளைச் சாமி ஒரு நாள் பொதுக் கூட்டத்திற்கு போயிருந்தார். அங்கே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதாவது ;

"ஒரு பச்சை யானை வெள்ளை முட்டை போட்டது. அதிலிருந்து ஒரு குருவிக் குஞ்சு வெளிவந்து, ஒரு சிங்கத்தை கொன்று விட்டது. அந்தச் சிங்கம் ஒரு யானையின் உயிரை வாங்கிக் கொண்டு மீண்டும் வந்துவிட்டது...."

அவர் பேச்சை கேட்ட வெள்ளைச்சாமி பக்கத்தில் இருந்த நண்பரிடம் " இவர் யார் ?" என்று கேட்டார்.

இவர் தான் பெருவாரியான வோட்டுகளில் ஜெயித்த எம்.எல்.ஏ " என்றார் நண்பர்.

*************************************************************************
கணக்கில் வராத பணம் !

ஊரெங்கும் கருப்புப் பணம், கருப்புப் பணம் என்று பேசிக் கொண்டார்கள்.
வெள்ளைச்சாமிக்கு அது என்னவென்று புரியவில்லை.

அவரி கையில் நூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய்க் கட்டு ஒன்று இருந்தது.

அதிகாரி ஒருவரைப் பார்த்து " ஐயா..கருப்பு பணம் என்றால் என்ன? என்று கேட்டார்.

கணக்கில் வாராத பணம் ...என்று சொன்னார் அதிகாரி.

வெள்ளைச் சாமி தன்னிடம் இருந்த ஒரு ரூபாய்க் கட்டை எண்ணிப் பார்த்தார். மொத்தம் தொண்ணூற்றொன்பது ரூபாய்தான் இருந்தது.

ஓஹோ...ஒரு ரூபாய் கருப்புப் பணம் போலிருக்கிறது..! என்று முணுமுணுத்தார் வெள்ளைச்சாமி.

************************************************************************
வாக்குச்சீட்டின் மகிமை !

ஒரு அரசியல் கூட்டத்திற்குப் போய் அமைதியாக உட்கார்ந்தார், வெள்ளைச்சாமி.  பேசத்தொடங்கிய ஒருவர்  " தாய்மார்களே...! " என்று ஆரம்பித்தார்.

"நிறுத்தையா...என்று கத்தினார் வெள்ளைச்சாமி.

உனக்குக் கொஞ்சமாவது மானம்..வெட்கம்...இருக்குதா ?

இவ்வளவு பெண்கள் இருக்கும் இடத்தில் அசிங்கமாகப் பேசுகிறாயே..!

"தாயே.." என்று கூப்பிடுங்கள் என்றார்.

****************************************************************************
பெருங்கதை !

திடீரென்று வெள்ளைச் சாமிக்கு சினிமாவுக்கு கதை வசனம் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது.

"பெரிய நடிகர்கள் நடிக்கின்ற படத்துக்குக் கதை எழுதினால் தான் முன்னுக்கு வரலாம்  ! என்று யாரோ சொன்னார்கள்.

உடனே வெள்ளைச் சாமி பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

"கதாநாயகன் ராமு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். கதாநாயகி கமலா ஒரு ஆபீஸில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராகக் காதலித்தார்கள். ராமுவுக்கு வயது அறுபத்தொன்பது. கமலாவுக்கு வயது பதினாறு.."

- வெள்ளைச் சாமியின் கதை உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

****************************************************************************
நீங்கள் வருவீர்கள் !

வேலங்குடி வெள்ளைச்சாமியின் கனவில் கடவுள் தோன்றி "மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார்.

வெள்ளைச்சாமி ஆசையோடு " நான் மந்திரியாக வேண்டும் என்று கேட்டார்.

கடவுள் வரத்தை அளித்துவிட்டார்.

வெள்ளைச்சாமி வரம் வாங்கி வந்ததைக் கேள்விப்பட்ட அவரது நண்பர் கருப்புசாமி தானும் கடவுளிடம் வேன்டினார். அவர் கனவிலும் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார்.

நான் விசாரணைக் கமிஷன் தலைவராக வேண்டும் என்றார் கருப்புசாமி.

வேலங்குடி வெள்ளைச்சாமி பம்பாய்க்கு போனார் அங்கே சிவப்பு விளக்கு பகுதிக்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது.

மடியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டார். பிறகு மெதுவாகச் சிவப்பு விளக்குச் சாலையில் நடந்தார். பயந்து கொண்டே திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து விட்டார்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார் வெள்ளைச்சாமி.

மெதுவாக கேட்டார்.   நீ..ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் ?

அவள் அமைதியாகச் சொன்னாள் : நீங்கள் வருவீர்கள் என்றுதான்...!

*******************************************************************************

ஞானத் தொழிற்சாலை

ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார்.   பக்கத்தில் மனைவியைக் காணவில்லை !

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே குதிரைக் காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள். மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் " எனக்கு மிக்க மகிழ்ச்சி!  ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே ! "

' நீயல்ல, குதிரைக் காரன் "

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

"நில்.. ! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !.....

Monday, 18 May 2015

அட மக்குப் புருஷா

 
 
இரவு நேரம், மனைவியின் செல்போனில் பீப் என ஓசை வருகிறது. 
எடுத்துப் பார்த்த கணவர் கோபமாகி விட்டார். 
கணவர்: யாருடி இந்நேரத்துக்கு உனக்கு பியூட்டி புல்னு மெசேஜ் அனுப்பி இருக்கறது ? 
மனைவி: அட மக்குப் புருஷா, அது பியூட்டி புல் இல்ல, பேட்டரி புல்...
 நல்லாப் பாரு கணவர்: !!???

Friday, 15 May 2015

மனைவி வளர்க்கும் நாய்

குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது
 
அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.
 
ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய்,
இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில்
விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்..!
அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!
 
கடுப்பான குமார்,
அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த
ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள்
வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்
வீட்டில் நாய்..!!
 
மூன்றாம் நாள்
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன்,
காரை எங்கெங்கோ செலுத்தினான்.
 
வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.
ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான்.
இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த 
நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,
வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டுபுறப்பட்டான்.
 
வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் 
செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டான்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றாள் அவள்.
 
அந்த சனியன்கிட்டே போனைக் கொடு..!!
வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு.