Thursday 10 September 2020

தைரியமா, சூடான கேள்வி கேட்டுட்டாரு..!

 தலைவரே, உங்களை சந்திக்க தொகுதி மக்கள் வந்திருக்காங்க,

எப்ப சந்திக்கிறீங்க..?

வெயில்ல வீணா அலைய வேண்டாம்…
அடுத்த எலக்ஷன் அப்ப, நானே நேரில் சந்திக்கிறேன்னு
சொல்லி அனுப்பு…!


>எஸ்.சடையப்பன்

——————————————

கமலா, உன் பிறந்த நாளுக்கு செயின் வாங்கித் தரேன்..!

செயின் வேணாங்க…கார் வாங்கிக் கொடுங்க..!

கவரிங்ல கார் கிடைக்காதே, கமலா…!

>பி.பாலாஜி கணேஷ்

நேத்து பைக்ல வந்து செயினை பறிச்சுட்டுப் போனவன்,
இன்னைக்கு திரும்ப கொண்டு வந்து கொடுத்துப்
போறான்…!


ஏன்?

ஓல்டு மாடல்னு அவனோட மனைவி வேணாம்னு,
சொல்றாங்களாம்..!


>என்.பர்வதவர்த்தினி

—————————————

என்னடா, சட்டை போடாம வாக்கிங் போறே?

டாக்டர்தான் வெறும் வயித்தோட நடக்கணும்னு
சொன்னார்..!


>எச்.ஷாகூல் ஹமீது

—————————————

நீ குளிக்காம இருக்கறதுக்கு உங்க அப்பாதான் காரணமா?

எங்க அப்பாதான் உன்னை பார்க்கறவங்க மூக்கு மேல
விரல் வைக்கணும்னு சொன்னார்…!

>சீ.இருளப்பசாமி

தலைவரோட தொப்பைக்கு எதிர்க்கட்சிதான்
காரணமாமே..!


ஆமா…எதிர்க்கட்சி மிரட்டலுக்குப் பயந்துதானே
தலைவர், ‘வாக்கிங்’ போறதை அடியோடு நிறுத்திட்டார்..!

>வைஷ்ணவி

——————————————–

கூட்டணி பற்றி பேச வரும்போது தலைவர் குடிச்சு
இருப்பார்னு எப்படி சொல்றே?


பின்ன.ஜெயிச்சா நான்தான் கவர்னர்ன்னு சொல்றாரே…!

>வி.பார்த்தசாரதி

—————————————

நம்ம மன்னருக்கு பேரீச்சம்பழம்னா சுத்தமா பிடிக்காது..!

அதுக்காக பழைய இரும்பு வியாபாரியிடம், வாளை
கொடுத்துவிட்டு, மாம்பழம்’ குடுன்னு சண்டை போடறது
நல்லாவா இருக்கு…!


>வி.பார்த்தசாரதி


தலைவருக்கு கபாலி மாமூல் தர்றானே?

அது மாமூல் இல்லே…குரு தட்சணை..!


>லெ.நா.சிவகுமார்

——————————

எதுக்குங்க தலைவரே, ஒயின் ஷாப்ல போய் வெள்ளி
ஒரு கிலோ குடுங்கன்னு கேட்டீங்க…?


டி.வி.செய்தியில ‘பார்’ வெள்ளி ஒரு கிலோ ஆயிரம்
ரூபாய் குறைஞ்சிருக்குன்னு சொன்னாங்களே..!


>ராசி

——————————–

தலைவர் சரியான சந்தேகப்பேர்வழி..!

எப்படி சொல்றே?

எங்கே கள்ள நோட்டு இருக்குமோன்னு சந்தேகப்பட்டு,
பணமாலை சூட்ட வந்தவங்ககிட்டே ‘செக் மாலை’யா
போட்டுடுங்கன்னு சொன்னாரே…!


மண்டை ஒடைஞ்சு ரத்தம் வர்றதுக்கு தலைவர்
சொல்ற காரணம் நம்பும் படியா இல்லையே!


என்ன சொன்னார்?

வெயில் மண்டையை பிளந்துடுச்சுன்னு சொல்றார்!

சோலை சுகுணா.

————————————-

தலைவர் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாரே!

என்ன சொன்னார்?

நிழலுக்கு கூட புழல் பக்கம் ஒதுங்கியது இல்லைங்கிறாரே!

வீ.விஷ்ணுகுமார்.


தலைவர் சொன்ன பதிலை கேட்டு ஜட்ஜ் டென்ஷன்
ஆயிட்டாரா.. ஏன்?


ஆத்துல ஏன் மணல் அள்ளுனீங்கன்னு கேட்டா போலீஸ்
கண்ணுல தூவறதுக்குன்னு சொன்னாராம்!

பர்வீன் யூனுஸ்.

————————————————

முப்பது வருஷத்துக்கு எதிரிங்க தலைவர்கிட்ட நெருங்கவே

முடியாது!

அப்புறம்?

அப்புறம் விடுதலை ஆயிருவாரு!

கி. சாமிநாதன்.

No comments:

Post a Comment