Saturday, 17 November 2018

சிரி சிரி ....

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே
போனீங்களே.. என்ன ஆச்சு..?”
“டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு..!

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க..”
“சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?”


||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


“உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக்
கூடாதா?”
“அதனால உனக்கென்ன?”
“நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே”

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான
கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?”
“இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!”

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு 
சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?”
“என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் 
பயமா இருக்கு!”

—————————————-


“ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னைய மூணு பேர் 
சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க சார்…” 

“ரெண்டு நாளா கம்ப்ளெயிண்ட் பண்ணாம என்ன பண்ணினே?” 

“அவங்ககிட்ட பணம் கேட்டு அலைஞ்சிட்டிருந்தேன்…”


—————————————–
ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல…?”


“சார்… எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி 
போனா மரியாதையா இருக்காதுனு”

—————————————-“என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?” 

“அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா 
புரிஞ்சுக்கிட்டாரு..”


டாக்டர், எனக்குத் தொடர்ந்து தினசரி கனவு வருகிறது!

உங்களுக்கு வந்திருப்பது மெகா சீரியல் கனவு.
பயப்படாதீங்க 100 எபிசோடில் முடிந்துவிடும்!


———————————-

நேத்து என்னை மானேஜர் என்னைக்  கூப்பிட்டு இந்த
ஆபிஸ்ல சிரிச்ச முகமா இருக்கிற ஒரே ஆள்
நான்தானாம், பாராட்டினார்!


டே….உன்னை மறைமுகமா இளிச்ச வாயன்னு சொல்றார்!


——————————————-

ஓடுற பஸ்ல ஏறக்கூடாதுன்னு தெரியாதா உனக்கு?

ஓடாத பஸ்ஸில் ஏறினால் எந்தக் காலத்தில நான் ஊர்
போய்ச் சேர்றது…!—————————————

என் மனைவி கல்யாணமான புதுசில தேன்மாதிரி பேசுவா!

இப்ப?

தேனீ மாதிரி கொட்டுறா!


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

மாத்திரையெல்லாம் எழுதித் தந்துட்டேனே…
அப்புறம் என்ன?’’
‘‘நர்சுக்கு என்னென்ன பிடிக்கும்னு அப்படியே
எழுதிக் கொடுங்க டாக்டர்!’’


—————————–
‘அரெஸ்ட் ஆகி ஜெயில்ல இருக்கிற மாதிரி
கனவு வருது டாக்டர்…’’
‘‘இந்த மருந்தை சாப்பிடுங்க…
உடனே ஜாமீன் கிடைக்கிற மாதிரி கனவு வரும்!’’
– 

—————————————–
‘‘தலைவர் குஷியா இருக்காரே, என்ன விஷயம்?’’
‘‘இன்னைக்கு தொண்டர்கள் அவருக்குப் பிடிச்ச
செருப்பா வீசியிருக்காங்க!’’


————————————
‘‘அன்பார்ந்த பெரியோர்களே… தாய்மார்களே…’’
‘‘திரும்பி நின்னு பேசுங்க தலைவரே! நாங்க
எல்லாம் மேடைலதான் இருக்கோம்.’’

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

டார்லிங்… நம்ம காதலை ஏழு ஜென்மத்துக்கும்
மறக்க மாட்டேன் டியர். . .!
நீங்க இப்படி சொல்றீங்க,’’அந்த ராஸ்கல் என் கையில்
சிக்கிட்டான்னா, அடிக்கிற அடியை ஏழு ஜென்மத்துக்கும்
மறக்க மாட்டான்’’ னு என் டாடி சொல்றாரே!
-=====================================
தினமும் என் புருசனை அடிக்கிற மாதிரி கனவு
வருது டாக்டர்!
அதனால் என்ன?
விடிஞ்சு பார்த்தா பூரிக்கட்டை உடைந்து போயிருக்கு
டாக்டர்!
-=====================================
தலைவர் எதுக்கு பல குரலில் பேச ஆசைப்படறாரு?
ஒரே அபார்ட்மெண்ட்லே நிறைய சின்ன வீடுகளை
குடி வெச்சிருக்கிறாராம்!
-=========================================
அமைச்சரே, மன்னன் இன்று எனக்கு பொன் தருவானா?
புலவரே… பொத்திக்கிட்டு போய்விடுவது நலம். அரண்மனை
அண்டாவில் பூச ஈயம் வாங்கக் கூட காசில்லாத அளவுக்கு
கஜானாவை காலி செய்து வைத்திருக்கிறான் இந்த ஊதாரி
மன்னன்!
-======================================
ஆண்களை மதிக்கிற ஜவுளிக் கடை அது ஒன்னுதான்னு
எப்படி சொல்றே?
மனைவிகள் புடவைகள் எடுத்திக்கிட்டு வர்றவரைக்கும்
போரடிக்காம, கணவன்மார்கள் சினிமா பார்க்க ஜவுளிக்கடை
பக்கத்திலேயை ஹோம் தியேட்டர் கட்டி வச்சிருக்காங்களே!
-======================================


நீங்க அதிசயத் தலைவர் தலைவா…!

எப்படி சொல்றே?

உங்களுக்கு செலவு வைக்க கூடாதுன்னு நினைச்சு
நம்ம கட்சியில் யாருமே உள்ளாட்சித் தேர்தல்ல
நிக்கலே பாருங்க…!
————————————-

இடுப்பு வலிக்கு மருந்து கேட்டா வயித்து வலிக்கு
மருந்து கொடுத்திட்டீங்களே, டாக்டர்!


எப்படி கண்டுபிடிச்சே?

ஒரு வருஷமா தீராத வயித்து வலி தீர்ந்து
போச்சுங்களே..!-,
—————————————-

எனக்கு வாழ்த்த வயசில்லை அதனால் வணங்குகிறேன்!

தலைவரே, நீங்க வாழ்த்த வந்தது என்னோட
பேரக் குழந்தையா…!!——————————————-

சாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்டே?

ஏழு ஜென்மத்துக்கும் நான்தான் உங்க மனைவியா
இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்!, நீங்க என்ன
வேண்டிக்கிட்டீங்க?

இது ஏழாவது ஜென்ம்மா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்!!

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||


No comments:

Post a Comment